தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்கு

அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்கு

அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்கு


UPDATED : நவ 07, 2026 09:08 PM

ADDED : நவ 07, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 09:08 PM ADDED : நவ 07, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரை சேர்ந்தவர் சதீஷ், 40; மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடி வேழமுறித்தான் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 6ம் தேதி, மாணவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, ஆசிரியர் சதீஷ் மீது, தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் சிலர் முறையிட்டனர். அதையடுத்து, தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டு, மாணவர்கள் சிலர், பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் சதீைஷ தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சதீஷ், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us