தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/மயிலாடுதுறையில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறையில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறையில் துலா உற்சவ கொடியேற்றம்


ADDED : நவ 07, 2026 09:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 09:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி 30 நாட்கள் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் கடைசி 10 நாட்கள் விழா கொடியேற்றப்பட்டு மிகவும் விமர்சையாக நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று (நவ.,7) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரிய கொடி ஏற்றப்பட்டது. அதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் பஞ்சமுக கொடியேற்றப்பட்டது.

சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல அறம் வளர்த்த நாயகி சமேய ஐயாறப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமையத வதானேஸ்வரர் கோவில், படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், தெப்பக்குளம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில்களில் துலா உற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடந்தது.

இதில் ஆதீன கட்டளை தம்பிரான்கள், அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திர சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய விழாவாக இன்று (8ம் தேதி) அமாவாசை தீர்த்தவாரியும், 13ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி தேரோட்டம், 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி, 17ம் தேதி முடவன் முழுக்க உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us