தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/கதண்டு கொட்டி மாணவர்கள் காயம்

கதண்டு கொட்டி மாணவர்கள் காயம்

கதண்டு கொட்டி மாணவர்கள் காயம்


ADDED : அக் 27, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று (அக்.,27) காலை வழக்கம் போல் சீர்காழி, கோவில்பத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு டூவீலரில் சீர்காழி நோக்கி சென்றுள்ளனர். ஊம மதகு என்ற பகுதியில் உள்ள புளியமரத்தில் இருந்த கதண்டு வண்டுகள் பறந்து அவ்வழியே சென்ற மாணவர்கள், பொதுமக்களை கொட்டியுள்ளது.

வண்டுகள் கொட்டியதில் கடும் வலி, அலர்ஜியால் துடித்த மாணவர்கள் ஆதமங்கலம் ஆத்தேஷ், 13, வள்ளுவக்குடி தரனேஷ், 12, ஸ்ரீஹரி, 15; மற்றும் பாலகுமாரன், 44, கலையரசன், 48; உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மரத்தில் உள்ள கதண்டு வண்டுகள், கூடுகளை தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us