/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
வேளாண் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தற்கொலை
/
வேளாண் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தற்கொலை
ADDED : செப் 19, 2024 01:57 AM
மயிலாடுதுறை:தஞ்சை மாவட்டம், பாபநாசம் பசுபதி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகுமார், 58. மயிலாடுதுறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருள் விற்பனை கண்காணிப்பாளராக, கடந்த நான்காண்டுகளாக பணியாற்றி வந்தார். வேலை அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி பணி செய்வது மணிகுமார் வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால், பசுபதிகோவிலில் உள்ள வீட்டிற்கு சென்ற மணிகுமார், அலுவலகத்தில் வேலை இருக்கிறது எனக்கூறி நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வந்தார். நேற்று காலை வேளாண் மையத்திற்கு சக அலுவலர்கள் வந்த போது, மணிக்குமார் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

