/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சீர்காழி அருகே தைவான் தம்பதிக்கு ஹிந்து முறைப்படி திருமணம்
/
சீர்காழி அருகே தைவான் தம்பதிக்கு ஹிந்து முறைப்படி திருமணம்
சீர்காழி அருகே தைவான் தம்பதிக்கு ஹிந்து முறைப்படி திருமணம்
சீர்காழி அருகே தைவான் தம்பதிக்கு ஹிந்து முறைப்படி திருமணம்
ADDED : ஜன 09, 2025 06:58 AM

மயிலாடுதுறை : சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதிக்கு ஹிந்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா காரைமேடு கிராமத்தில் ஒளிலாயம் சித்தர் பீடம் உள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனி சன்னதியும், 18 படி விநாயகர் சன்னதியுடன் கூடிய மகாலிங்கமும் அமைந்துள்ளன.
தைவான் நாட்டை சேர்ந்த காதலர்களான இமிங், சுஹூவா ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
அதற்காக, நேற்று முன்தினம் உறவினர்களுடன் தமிழகம் வந்தனர். சீர்காழி மற்றும் திருவெண்காடு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்திற்கு வந்தனர்.
நேற்று காலை ஹிந்து முறைப்படி ஒளிலாயம் சித்தர் பீடத்தில், தமிழர் பாரம்பரியப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, சிவாச்சாரியார்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
புதுமண தம்பதியின் உறவினர்கள் தமிழர் கலாசாரபடி பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.