/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மாணவிக்கு சீண்டல் ஆசிரியருக்கு வலை
/
மாணவிக்கு சீண்டல் ஆசிரியருக்கு வலை
ADDED : ஜூன் 19, 2025 10:41 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில், 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம். தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆண்டு 3ம் வகுப்பு பயின்ற மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்த புகாரின் பேரில் துறை ரீதியில் கண்டிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் வினோத்குமார் 4ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான ஆசிரியர் வினோத்குமாரை தேடி வருகின்றனர். இதனிடையே வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.