/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
/
லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
ADDED : மார் 07, 2025 09:28 PM

திண்டுக்கல்; தேனி மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு செம்பட்டி வழியாக லாரியில் கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் லாரியில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ., ராதா தலைமையிலான போலீசார் செம்பட்டி ஆத்தூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் லாரி ஒன்று வேகமாக செல்ல முயன்றது. போலீசார் மடக்கிப் பிடிக்க லாரியை ஓட்டி வந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த விக்னேஷ், போலீசிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த தனியார் மில் உரிமையாளர் அன்வர் என்பவர் அப்பகுதியில் சிலரோடு சேர்ந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை குருணையாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்ததும், தற்போது லாரி மூலம் ரேஷன் அரிசியை தேனியில் இருந்து தாராபுரத்திற்கு கடத்தி செல்வதும் தெரிந்தது. போலீசார் உடனே பெரியகுளத்தை சேர்ந்த அன்வர், லாரி டிரைவர் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து 19 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பிடித்தனர்.