/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; டிக்கெட் பரிசோதகருக்கு வலை
/
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; டிக்கெட் பரிசோதகருக்கு வலை
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; டிக்கெட் பரிசோதகருக்கு வலை
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; டிக்கெட் பரிசோதகருக்கு வலை
ADDED : ஜன 07, 2025 12:36 AM
மயிலாடுதுறை; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த 34 வயது பெண், சென்னையில் பணியாற்றும் தன் கணவரை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு, சென்னை, தாம்பரத்தில், உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'எஸ் 2' பெட்டியில் தன் தாய் மற்றும் குழந்தையுடன் ஏறினார்.
அந்த பெண் கேட்டுக் கொண்டதன்படி, 'லோயர் பர்த்' ஒதுக்கி கொடுத்த டிக்கெட் பரிசோதகர் தாமஸ் வெல்லசி, அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து பயணியர் திரண்டனர். டிக்கெட் பரிசோதகர், அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், மயிலாடுதுறை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். தஞ்சாவூரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் தாமஸ் வெல்லசியை, போலீசார் தேடுகின்றனர்.