/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறையில் சோகம்; சிலிண்டர் வெடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்
/
மயிலாடுதுறையில் சோகம்; சிலிண்டர் வெடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்
மயிலாடுதுறையில் சோகம்; சிலிண்டர் வெடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்
மயிலாடுதுறையில் சோகம்; சிலிண்டர் வெடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்
ADDED : ஜன 30, 2025 10:39 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வயதான தம்பதி தற்கொலைக்கு முயன்ற போது சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த மனைவி பலியானார். கணவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்.69. ஹோமியோபதி டாக்டர். இவரது மனைவி செந்தாமரை.59. இவரது மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
மகன் குடும்பத்துடன் வீட்டின் மேல் பகுதியில் வசித்து வருகிறார். இளங்கோவனுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செந்தாமரை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மற்றவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பாத இளங்கோவன், செந்தாமரை தம்பதி இன்று காலை கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் முன்புற அறை முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்தது. இளங்கோவன், செந்தாமரை இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கணவன், மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.