ADDED : அக் 21, 2026 12:04 AM

அ நிறம் | அளவு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரம் அரசு உதவி பெறும் மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தருமபுரம் ஆதீன மடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆதீன பூஜை மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் குழந்தைகளின் நாக்கில் மயிலிறகினால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுதி அக்ஷராபியாசம் செய்து ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்து ஆசி வழங்கினார். பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
