ADDED : டிச 23, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மாத்துாரை சேர்ந்தவர் செல்வராஜ், 59; விவசாய கூலி தொழிலாளி. திருமணமாகி நாகை மாவட்டம், கீவலுாரில் வசித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று காலை செல்வ ராஜ், மேலபாதி என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இறங்கியபோது மூழ்கி இறந்தார்.
செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

