/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு சிறை
ADDED : டிச 20, 2024 01:39 AM
மயிலாடுதுறை,:குத்தாலம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மேனன்,27. இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜன. 28ம் தேதி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சுரேஷ் மேனனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் சுரேஷ் மேனனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ராம சேயோன் ஆஜரானார்.