/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தயார்
/
வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தயார்
வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தயார்
வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தயார்
ADDED : ஆக 23, 2024 01:05 AM

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவிற்கு வருகை தரவுள்ள பக்தர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தேவாலய அதிபர் இருதயராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம், பண்பாட்டினாலும், மொழியினாலும், சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்கள் அனைவரும் சங்கமிக்கும் புண்ணிய பூமியாக திகழ்கிறது.
இவ்வாலயத்தில் அன்னையின் பிறந்த நாள் செப்., 8ம் தேதியை கொண்டாடும் விதமாக ஆண்டுத் திருவிழா வரும் 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
செப்.,7ம் தேதி, பெரிய சப்பர பவனி, 8ம் தேதி மாதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு திருவிழா நிறைவடைகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிஷப் சகாயராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது.
இத்திருவிழாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அடிப்படை வசதிகளும், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மறை மாவட்ட பிஷப் ஆக, திருச்சியை சேர்ந்த சகாயராஜ், கடந்த ஜூலை 18ம் தேதி பொறுப்பேற்றார். வேளாங்கண்ணி வந்த அவரை, ஆரோக்கிய மாதா தேவாலயம் சார்பில் அதிபர் இருதயராஜ் மற்றும் பாதிரியார்கள் வரவேற்றனர்.
பிஷப் சகாயராஜ் தலைமையில் தேவாலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.