/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
அரசு மருத்துவமனை இடமாற்றம் நாகையில் மக்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசு மருத்துவமனை இடமாற்றம் நாகையில் மக்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனை இடமாற்றம் நாகையில் மக்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனை இடமாற்றம் நாகையில் மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 03, 2024 02:17 AM

நாகப்பட்டினம்:நாகப்பட்டினத்தில், அரசு மருத்துவமனையை முந்தைய இடத்திலேயே செயல்பட வலியுறுத்தி, ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை நகரின் மத்தியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த அரசு மருத்துவமனை கடந்த, 24ம் தேதி முதல், 12 கி.மீ., தொலைவில் உள்ள ஒரத்துாரில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால், நாகை அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் பிரிவு மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படும் என, அரசு அறிவித்தது.
ஆனால், அவசர சிகிச்சை, புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவ மாணவர்கள், வரும் நோயாளிகளை ஒரத்துார், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நாகை, சட்டசபை தொகுதியில் இருந்த அரசு தலைமை மருத்துவமனையை மாற்றம் செய்ததை கண்டித்தும், மீண்டும் உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நேற்று மருத்துவமனை வாயிலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு மருத்துவமனை வாயிலில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.