/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணியில் பாதுகாப்பு குளறுபடி பல கி.மீ., போக்குவரத்து ஸ்தம்பிப்பு
/
வேளாங்கண்ணியில் பாதுகாப்பு குளறுபடி பல கி.மீ., போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வேளாங்கண்ணியில் பாதுகாப்பு குளறுபடி பல கி.மீ., போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வேளாங்கண்ணியில் பாதுகாப்பு குளறுபடி பல கி.மீ., போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : ஆக 30, 2024 10:12 PM
நாகப்பட்டினம்:வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவில் பாதுகாப்பு குளறுபடியால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
திருவிழா நாட்களில் 24 மணி நேரமும் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் பல நாட்கள் ஆய்வு செய்து, நாகை எஸ்.பி., அருண் கபிலன் தலைமையில், 5 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 16 டி.எஸ்.பி.,க்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 150 எஸ்.ஐ.,க்கள் என 2600 போலீசார், 400 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பணியில் அமர்த்தப்பட்ட போலீசார் மத்தியில் முறையான ஒருங்கிணைப்பு , வழிகாட்டல் இல்லாததால், பக்தர்கள் கூட்டத்தை நெறிமுறைப்படுத்துவதில் போலீசார் கோட்டை விட்டனர். மது போதையில் சுற்றிய இளைஞர்களால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். வாகனங்கள் 5 கி.மீ., துாரத்தில் பரவை என்ற இடத்தருகே நிறுத்தப்பட்டதால், பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதை சாதகமாக்கி ஆட்டோ டிரைவர்கள் வருவாய் பார்த்தனர். முக்கிய பிரமுகர்கள் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை, , கொடியேற்றம் முடிந்ததும் வௌியேற்றுவத்தில், போலீசாரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன. பல இடங்களில் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் குளறுபடியால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.