UPDATED : நவ 16, 2026 05:36 PM
ADDED : நவ 16, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
நாகப்பட்டினம்: நாகையில், நடந்து சென்றவரிடம் செயின் பறித்த வழிப்பறி ஆசாமிகள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை அடுத்த அந்தணப்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ், 26. இவர் கடந்த 14 ம் தேதி, ஜெகனாதபுரம் என்ற இடத்தில் உள்ள சர்ச்சுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த மூவர், பீர் பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக மிரட்டி, தினேஷ் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க செயின், பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து நாகை, டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், செயின் பறிப்பில் ஈடுபட்டது புததுாரை சேர்ந்த விஜய்பாபு, 29, சர்குருநாதன்,19, பிரகதீஷ்,19, என தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
