/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
சிறுமி பாலியல் பலாத்காரம் கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமி பாலியல் பலாத்காரம் கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம் கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம் கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஏப் 18, 2025 02:08 AM
நாகப்பட்டினம்:நாகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், கீழ்வேளூரை சேர்ந்தவர் மாதவன்,44. கொத்தனார். இவர், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக, ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன், 28 ம் தேதி, நாகை, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து, மாதவனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை நாகை போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா, மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவுமு் உத்தரவிட்டார்.