/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் : 3 பேர் கைது

ADDED : டிச 22, 2025 09:54 AM
நாகப்பட்டினம்: நாகையில், தடை செய்யப்பட்ட போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகு வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நுண்ணறிவு போலீசார் வேளாங்கண்ணியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆரோக்கியமாதா தேவாலய கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், சர்வதேச சந்தை மதிப்பில் 6 கோடி ரூபாய் மதிப்புடைய, 2 கிலோ எடையுடைய 'மெஸ்கலின்'' என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், ஹிந்து மக்கள் கட்சியின் , நாகை வடக்கு மாவட்ட செயலாளரான, நாகை, புதிய நம்பியார் நகர் ரவிச்சந்திரன்,40, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சுனாமி குடியிருப்பு ஆனந்தராஜ், 33, வேதாரண்யம், காஞ்சிநாதன், 31, என்பது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், போதை பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.