/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
குடிநீர் நிலையத்தில் வாயு கசிவு தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
/
குடிநீர் நிலையத்தில் வாயு கசிவு தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
குடிநீர் நிலையத்தில் வாயு கசிவு தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
குடிநீர் நிலையத்தில் வாயு கசிவு தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
ADDED : டிச 16, 2024 02:20 AM

நாகப்பட்டினம்: நாகை நகராட்சி, வெளிப்பாளையம், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து நாகை நகர் முழுதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு குடிநீரில் கலப்பதற்காக, 2005ல் கொள்முதல் செய்யப்பட்ட ஐந்து குளோரின் சிலிண்டர்கள் இருந்தன.
பராமரிப்பின்றி கிடந்ததால், நேற்று ஒரு சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிப்போருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிலிண்டரை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர்கள் அகிலன், 28, முனியப்பன், 29, ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் தீவிர சிகிச்சைக்கு பின் திரும்பினர். வெளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.