/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் போராட்டம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் போராட்டம்
ADDED : மார் 01, 2024 12:59 AM

நாகப்பட்டினம்,:கடலில் அதிவேக இன்ஜினை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகுகளால், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மீனவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டத்தின் 30 கிராமங்களைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மீனவர்கள், இழுவை மடி வலைகளை தடை செய்ய வலியுறுத்தி, நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவ பிரதிநிதிகளை கலெக்டரிடம் அழைத்துச் செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் வருவதற்கு தாமதம் ஆனதால், மீனவர்கள் ஆவேசமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலை விலக்கிக் கொண்ட மீனவ பிரதிநிதிகள், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து மனு அளித்தனர்.

