/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி விடுதியில் மதுரை தம்பதி தற்கொலை
/
வேளாங்கண்ணி விடுதியில் மதுரை தம்பதி தற்கொலை
ADDED : மே 01, 2025 12:59 AM
நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணி தனியார் விடுதியில் மதுரை தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகே கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சேதுபதி,31. இவரது மனைவி ராஜேஸ்வரி,30. வேளாங்கண்ணிக்கு கடந்த 28ம் தேதி வந்தவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலையில் இருந்து அறைக்கதவு திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விடுதிக்கு சென்று, அறையின் கதவை திறந்து பார்த்தபோது, சேதுபதி, ராஜேஸ்வரி தம்பதியினர், தரையில் இறந்த நிலையில் கிடந்தனர்.
போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு செப்., மாதம் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு, தம்பதி இருவரும் தற்கொலைக்கு முயன்றதும், அவ்வழக்கில் சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்துள்ளனர். மேலும் குழந்தைகள் சென்ற இடத்திற்கே செல்வதாக உறவினர்களுக்கு மொபைல் போனில் தகவல் அனுப்பி விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என, தெரியவந்தது.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.