/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
/
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
ADDED : செப் 22, 2025 02:27 AM

நாகப்பட்டினம்: நாகையில் விஜய் பிரசாரத்தின்போது, தனியார் திருமண மண்டப மதில்சுவர் சேதமடைந்ததாக, த.வெ.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
நாகையில் நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார பயணம் மேற்கொண்டார். அங்கு, புத்துார், அண்ணாதுரை சிலை அருகே நடந்த பிரசார கூட்டத்தின்போது, அங்கிருந்த தனியார் திருமண மண்டபத்தின் சுவரின் ஒரு பகுதி, இரும்பு தடுப்புகள் கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்தது.
இதையடுத்து, திருமண மண்டப மேலாளர் அசோகன் அளித்த புகாரில், நாகை டவுன் போலீசார், த.வெ.க., மாவட்ட செயலர் சுகுமார், துணை செயலர் நரேஷ் குமார், சேகர் ஆகியோர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.