/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
பெற்றோர் தினமும் சண்டை: மாணவி துாக்கிட்டு தற்கொலை
/
பெற்றோர் தினமும் சண்டை: மாணவி துாக்கிட்டு தற்கொலை
பெற்றோர் தினமும் சண்டை: மாணவி துாக்கிட்டு தற்கொலை
பெற்றோர் தினமும் சண்டை: மாணவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 16, 2025 01:48 AM
நாகப்பட்டினம்: நாகையில், பெற்றோர் நாள்தோறும் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், படிப்பிற்கு இடையூறாக இருப்பதாக மன உளைச்சலில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடையை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,43. இவரது மகள் ஜெயந்தி,18. வேதாரண்யம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
ராமச்சந்திரனும் அவரது மனைவியும் நாள்தோறும் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சத்தம் போட்டு வந்துள்ளனர். இது, தனது படிப்பிற்கு இடையூறாக உள்ளதாக ஜெயந்தி, பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் தம்பதி இருவரும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனமுடைந்த ஜெயந்தி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

