/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
தற்கொலை செய்த மாணவன் உடல் எரிப்பு பெற்றோர் மீது போலீசார் வழக்கு
/
தற்கொலை செய்த மாணவன் உடல் எரிப்பு பெற்றோர் மீது போலீசார் வழக்கு
தற்கொலை செய்த மாணவன் உடல் எரிப்பு பெற்றோர் மீது போலீசார் வழக்கு
தற்கொலை செய்த மாணவன் உடல் எரிப்பு பெற்றோர் மீது போலீசார் வழக்கு
ADDED : நவ 16, 2025 01:48 AM
நாகப்பட்டினம்: நாகை அருகே மகன் தற்கொலை செய்து கொண்டதை போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை எரித்த பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பை சேர்ந்தவர் முருகையன் விவசாயி. இவரது 17 வயது மகன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல், அப்பகுதி இடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டது.
வி.ஏ.ஓ., சிவதாஸ், தகவல் தெரிவிக்காமல் உடல் எரியூட்டப்பட்டதாக, வேட்டைக்காரனிருப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவரின் பெற்றோரான முருகையன் மற்றும் அவரது மனைவி சூர்யகலா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.