sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

ரயில் பயணியிடம் வழிப்பறி: மூவர் கைது

/

ரயில் பயணியிடம் வழிப்பறி: மூவர் கைது

ரயில் பயணியிடம் வழிப்பறி: மூவர் கைது

ரயில் பயணியிடம் வழிப்பறி: மூவர் கைது


ADDED : டிச 27, 2024 12:39 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:வேளாங்கண்ணியில் ரயில் பயணியை தாக்கி, பணத்தை கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆணிக்காட்டைச் சேர்ந்தவர் காளிதாஸ்,32. இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில நினங்களுக்கு முன் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு ஊருக்கு செல்வதற்காக வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் சென்றுள்ளார். ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த காளிதாசை, மர்மநபர்கள் மூவர் தாக்கி, அவரிடம் இருந்த 65 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

சம்பவம் குறித்து நாகை இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார்,40, சக்திவேல்,29, மதுரை சிவா,24, என்பதும், காளிதாசை தாக்கி பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us