sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீர் குழாயில் உடைப்பு: சீரமைக்க வேண்டுகோள்

/

குடிநீர் குழாயில் உடைப்பு: சீரமைக்க வேண்டுகோள்

குடிநீர் குழாயில் உடைப்பு: சீரமைக்க வேண்டுகோள்

குடிநீர் குழாயில் உடைப்பு: சீரமைக்க வேண்டுகோள்


UPDATED : ஏப் 01, 2025 07:40 AM

ADDED : ஏப் 01, 2025 01:53 AM

Google News

UPDATED : ஏப் 01, 2025 07:40 AM ADDED : ஏப் 01, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக, மோகனுார், ஜேடர்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதேபோல், நாமக்கல்-திருச்சி சாலை, அரசு சட்டக்கல்லுாரி எதிரே உள்ள சிவஞானம் தெருவில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதன் காரணமாக, கணேசபுரம், துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மேலும், குழாய் உடைந்துள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள குழியால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அடையாளப்படுத்த, அப்பகுதி மக்கள் தென்னை மட்டைகளை நிற்க வைத்துள்ளனர். எனவே, கணேசபுரம், சிவஞானம் தெரு பகுதி மக்களின் நலன் கருதி, உடைந்துள்ள குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us