தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் ஆக்கிரமிப்புஉள்ளே வந்து செல்ல முடியாமல் பஸ் டிரைவர்கள் அவதி

மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் ஆக்கிரமிப்புஉள்ளே வந்து செல்ல முடியாமல் பஸ் டிரைவர்கள் அவதி

மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் ஆக்கிரமிப்புஉள்ளே வந்து செல்ல முடியாமல் பஸ் டிரைவர்கள் அவதி


ADDED : ஜன 30, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் ஆக்கிரமிப்புஉள்ளே வந்து செல்ல முடியாமல் பஸ் டிரைவர்கள் அவதி

நாமக்கல்:'மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டிற்குள், சரக்கு, வாடகை வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் பஸ்கள் உள்ளே எளிதாக வந்து செல்ல முடியாமல் இடையூறில் சிக்கி தவிக்கின்றன. அவற்றை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து, திருச்செங்கோடு - சேலம் சாலையில், பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு, சேலத்தில் இருந்து, திருச்செங்கோடு, ஈரோடு செல்லும் பஸ்களும்; ஈரோடு, திருச்செங்கோடு வழியாக, ஆட்டையாம்பட்டி, சேலம் செல்லும் அரசு, தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. அவ்வாறு வந்து செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து செல்ல வேண்டும். ஆனால், அனைத்து பஸ்களும் வெளியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றிச்செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தன. இதனால், பொதுமக்கள் மிகுந்த

சிரமத்துக்குள்ளாகி வந்தனர். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் வெளியே நிற்பதா, பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்பதா என குழப்பத்தில், சாலையை கடந்து சென்று வந்தனர். இதனால், விபத்து ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருச்செங்கோடு தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் உமா, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பஸ்கள் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று செல்வதை பார்த்த அவர், 'அனைத்து பஸ்களும், பஸ் ஸ்டாண்டிற்குள் வந்துசெல்ல வேண்டும்' என, டிரைவர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அவரது உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பஸ் டிரைவர்கள், வழக்கம்போல் பயணிகளை வெளியே இறக்கிவிட்டும், ஏற்றியும் சென்றனர். இதுகுறித்து தட்டிக்கேட்டபோது, அடாவடியாக டிரைவர்கள் பேசினர்.

வட்டார போக்குவரத்து துறையினர், சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அனைத்து பஸ்களும் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டிற்குள் சரக்கு வாகனங்கள், வாடகை கார், சொந்த வேன் உள்ளிட்டவை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், உள்ளே வந்து செல்லும் பஸ்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அவற்றை அப்புறப்படுத்த முடியாமல், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் விழிபிதுங்கி உள்ளது.

இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் கூறியதாவது: ஆர்.டி.ஓ., எச்சரித்தபின், தற்போது அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்கின்றன. அங்குள்ள பயணிகள் நிழற்கூடம் இடையூறாக உள்ளது. அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தி உள்ளனர். அவற்றை நிரந்தரமாக அகற்ற போலீசில் புகார் செய்யப்படும். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு

வாகனங்கள் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us