/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தர்மபுரி---நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைஆறு வழிச்சாலையாக மாற்ற எம்.பி., பேச்சு

ADDED : பிப் 12, 2025 01:16 AM
தர்மபுரி---நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைஆறு வழிச்சாலையாக மாற்ற எம்.பி., பேச்சு
நாமக்கல்:ராஜ்யசபாவில், 'ஜீரோ ஹவர்ஸ்' நேரத்தில், தி.மு.க., - எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:தர்மபுரியில் இருந்து நாமக்கல் வரையிலான, 119.5 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை எண், 44 பாதையை, நான்கு வழிச்சாலையில் இருந்து, ஆறு வழிச்சாலையாக மேம் படுத்துவது மிகவும் கட்டாயமாகும்.
அந்த திட்டம் தற்போது விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் உள்ளது. மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலை, சேலத்திற்கும் நாமக்கல்லுக்கும் இடையே உள்ள புதுச்சத்திரம் பஞ்சாயத்து வழியாக செல்கிறது. இந்த பகுதி அதிக மக்கள் தொகை அடர்த்தியை கொண்டுள்ளது.
இப்பகுதியில் பல தொழில்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே, விபத்து அபாயத்தை குறைப்பதற்கும், அதிக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் புதுச்சத்திரத்தில் மேம்பாலம் அமைப்பது அவசியம். இதை டி.பி.ஆரில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை துவக்க வேண்டும்.
இந்த பிராந்தியத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.