தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி பலிநிலத்தில் கம்பி வேலி அமைத்த விவசாயி கைது

மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி பலிநிலத்தில் கம்பி வேலி அமைத்த விவசாயி கைது

மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி பலிநிலத்தில் கம்பி வேலி அமைத்த விவசாயி கைது


ADDED : ஏப் 10, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி பலிநிலத்தில் கம்பி வேலி அமைத்த விவசாயி கைது

மோகனுார்:மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் மூவர் பலியான சம்வத்தில், கம்பி வேலி அமைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார், ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் செல்வம், 60; மனைவி இளஞ்சியம், 50; பேரன் சுஜித், 5, பேத்தி, ஐவிழி, 3. கடந்த, 7ல், விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இளஞ்சியம், தன் பேரன், பேத்திகளுடன் சென்றார். இவரது விவசாய தோட்டத்தை ஒட்டி, அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு, மின் கம்பத்தில் இணைத்தபடி கம்பி வேலி அமைத்திருந்தார். மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டரில் இருந்து, கம்பி வேலியில் மின்சாரம் கசிந்து வந்துள்ளது.

இது தெரியாமல், அன்று மாலை, 3:30 மணிக்கு, இளஞ்சியம், தன் பேரன் சுஜித், பேத்தி ஐவிழியுடன், வரப்பில் நடந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கம்பி வேலியில் கை வைத்து நடந்தபோது, மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்நிலையில், கம்பி வேலி அமைத்த விவசாயி சுப்ரமணியை கைது செய்ய வேண்டும்; அலட்சியமாக இருந்த மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் முன், குடும்பத்தினர், உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, விவசாய நிலத்தில் போடப்பட்ட கம்பி வேலி அகற்றப்பட்டது. நேற்று, மூன்று பேர் இறப்புக்கு காரணமான கம்பி வேலி அமைத்த விவசாயி சுப்ரமணியை, மோகனுார் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us