/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி குறைப்பு மரவள்ளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

ADDED : ஜன 11, 2025 01:38 AM
ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி குறைப்பு மரவள்ளி விலை சரிவால் விவசாயிகள் கவலை
ப.வேலுார்,: ப.வேலுார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது வழக்கம். ஜவ்வரிசி ஆலைகளில், ஜவ்வரிசி, மாவு தயாரித்து வெளி மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.
அதன்படி, கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன், 7,000 ரூபாய்க்கு விற்பனையானது. பெரும்பாலான ஜவ்வரிசி ஆலைகள் உற்பத்தியை குறைத்து விட்டதால், மரவள்ளிக்கிழங்கு தேவை குறைந்தது. இதனால், மரவள்ளிக்கிழங்கு வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, இந்த வாரம் டன் ஒன்றுக்கு, 500 ரூபாய் குறைந்து, 6,500 ரூபாய்க்கு விற்றது. சிப்ஸ் மரவள்ளி, கடந்த வாரம் ஒரு டன், 8,000 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, 7,000 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து வரும் விலை சரிவால், மரவள்ளி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.