/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: பெற்ேறார் வாக்குவாதம்
/
அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: பெற்ேறார் வாக்குவாதம்
அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: பெற்ேறார் வாக்குவாதம்
அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: பெற்ேறார் வாக்குவாதம்
ADDED : ஜன 25, 2025 01:15 AM
அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: பெற்ேறார் வாக்குவாதம்
காரைக்குடி, : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள பத்தரசன்கோட்டையை சேர்ந்த கைலாசம் மகன் சக்தி சோமையா, 14; சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் இருந்த போது கணினி அறையில் மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த மாணவரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
பள்ளியில், 106 மாணவர்கள் படிக்கின்றனர். ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். கணினி அறையில் ஸ்விட்ச் போர்டு பல மாதங்களாக உடைந்திருந்தும் சரி செய்யவில்லை. மூன்று நாட்களாக பள்ளியில் மின்சாரம் இல்லாத நிலையில் நேற்று மதியம் சரி செய்யப்பட்டுள்ளது.
உடைந்த கிடந்த ஸ்விட்ச் போர்டில் கம்ப்யூட்டர் ஒயரை இணைக்கும் போது மாணவரை மின்சாரம் தாக்கியுள்ளது. ஆசிரியர்கள் இருக்கும் போது, மாணவரை வயரை பொருத்தக்கூறியது யார் என்று பெற்றோர் கேள்வி எழுப்பி
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.