தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'திறன் வளர்ச்சி பயிற்சி மாணவர்களுக்கு அறிவியல்கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்'

'திறன் வளர்ச்சி பயிற்சி மாணவர்களுக்கு அறிவியல்கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்'

'திறன் வளர்ச்சி பயிற்சி மாணவர்களுக்கு அறிவியல்கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்'


ADDED : ஜன 29, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'திறன் வளர்ச்சி பயிற்சி மாணவர்களுக்கு அறிவியல்கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்'

நாமக்கல்,''திறன் வளர்ச்சி பயிற்சி, மாணவர்களுக்கு அறிவியல் கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்கு விக்கும்,'' என, ராசி

புரத்தில் நடந்த முகாமில், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அறிவியல் ஆய்வக திறனை மேம்படுத்தும் திறன் வளர்ச்சி பணிமனை, ராசி

புரத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

இங்கு நடக்கும் பயிற்சி முகாமில், ஆணி படுக்கை பரிசோதனை, கடத்தல், வெப்பச்சலனம், கதிர்வீச்சு, இணை, தொடர் மின் சுற்று, அணுக்கள், மூலக்

கூறுகள், காந்த திசைகாட்டி, சிட்ரிக் ஆசிட், பேக்கிங் சோடா, வடிகட்டுதல், எலக்ட்ரோமேக்னெட்டிக் கிரேன், ஹோமோபோலர் மோட்டார், சோலார் பேனல், எலுமிச்சை பேட்டரி போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப் படுகிறது.

இவை, அறிவியலில், செய்முறை பயிற்சிகளை, அறிவியல் ஆய்வகத்

திறனை, மேம்படுத்துவதற்கானது. இப்பயிற்சி முகாம், மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும். மாநிலத்தில், அறிவியல் கல்வியை மேம்படுத்து

வதற்கான முக்கியமான ஒரு படி. இந்த பயிற்சி, மாணவர்களுக்கு அறிவியல் கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, உபகரண பெட்டி கள் வழங்கப்பட்டன. நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் நடுநிலைப்

பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us