/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
/
விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
ADDED : அக் 01, 2025 01:49 AM
நாமக்கல், தமிழகம் முழுவதும், இன்று ஆயுத பூஜை, நாளை, விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே, தமிழக அரசு நாளை மறுநாள்(அக்., 3) பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையால், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இதனால், பஸ், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டிலும், கோவை, திருச்சி, மதுரை மார்க்கங்களில் இயக்கப்படும் பஸ்களில் வழக்கத்தை காட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் வந்ததும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும், அவை போதுமானதாக இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். இதேபோல், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.