/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கணும்'

ADDED : ஜன 30, 2025 01:47 AM
'குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கணும்'
நாமக்கல்:'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக எம்.பி.,க்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசிடம், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், நீண்டகாலமாக போராடி வருகின்றனர். மத்திய பா.ஜ., அரசு இதுவரையிலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்து வருகிறது. 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், நாளை (ஜன., 31) துவங்குகிறது. கூட்டத்தில், மத்திய பா.ஜ., அரசு விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளன்றே, லோக்சபாவில் தமிழகத்தை சேர்ந்த, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி, எம்.பி.,க்கள், 40 பேரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், தமிழக எம்.பி.,க்கள் ஒன்றிணைந்து, தற்போது தொடங்கவுள்ள லோக்சபா கூட்டத்தொடர் முழுவதும் நடத்த விடாமல் முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.