/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இந்தியர்களுக்கு கை, கால்களில் சங்கிலி நாமக்கல்லில் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 08, 2025 12:47 AM
நாமக்கல்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக, 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன.
அவர்கள், நாடு கடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால், இப்படி மோசமாக நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை திருப்பி அனுப்ப நடத்தப்படும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, கிழக்கு மாவட்ட காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். லோக்சபா கூடுதல் அமைப்பாளர் வீரப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியர்களை திருப்பி அனுப்ப மேற்கொள்ளப் படும் விதத்தை
கண்டித்து கோஷம் எழுப்பினர்.பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, சாந்திமணி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் பொன்முடி, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.