/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கதமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
/
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கதமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கதமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கதமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
ADDED : பிப் 12, 2025 01:13 AM
நாமக்கல்:'தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு, பால் வளத்துறை, ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை, ஊக்கத்தொகையுடன், 4.3 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 38 ரூபாய்; 8.8 சதவீதம் கொழுப்பு சத்துள்ள எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 47 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்த விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை. பால் உற்பத்தி செய்யும் கால் நடைகளுக்கான ஊட்டச்சத்து கொண்ட அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் பராமரிப்பு வேலைக்கான ஆட்கள் கூலி போன்ற செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது லிட்டர் ஒன்றுக்கு, 15 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டம் வராமல் தடுக்க, தமிழ்நாடு அரசு சார்பில், பால் வளத்துறை உயர் அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.
அக்குழு மூலம் பால் உற்பத்தி செலவினங்களை ஆய்வு செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு, தமிழக அரசு கட்டுப்படியான கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.