/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒடுவன் குறிச்சி - வேலம்பாளையம்சாலை குண்டும், குழியால் அவதி
/
ஒடுவன் குறிச்சி - வேலம்பாளையம்சாலை குண்டும், குழியால் அவதி
ஒடுவன் குறிச்சி - வேலம்பாளையம்சாலை குண்டும், குழியால் அவதி
ஒடுவன் குறிச்சி - வேலம்பாளையம்சாலை குண்டும், குழியால் அவதி
ADDED : பிப் 20, 2025 01:32 AM
ஒடுவன் குறிச்சி - வேலம்பாளையம்சாலை குண்டும், குழியால் அவதி
ராசிபுரம்:ஒடுவன் குறிச்சியிலிருந்து, வேலம்பாளையம் ஊராட்சிக்கு செல்லும் கிராமத்து சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து, ஒடுவன்குறிச்சியிலிருந்து, ராசிபுரம் ஒன்றியம், வேலம்பாளையத்திற்கு செல்ல கிராம ஊராட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தார்சாலை, தற்போது குண்டும் குழியுமாக மாறிவிட்டது. கடந்தாண்டு பெய்த மழையால் சாலையில் அரை அடி உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சாலை, ஜல்லி கற்களாக மாறிவிட்டது. இவ்வழியாக தினமும், 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன.
அதுமட்டுமின்றி, அதிகாலையில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு இதன் வழியாகத்தான் எடுத்துச்செல்கின்றனர்.
குண்டும், குழியுமாக இருப்பதால், சீராப்பள்ளி வந்து, 4 கிலோ மீட்டர் துாரத்திற்கு விவசாயிகள் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளளது. எனவே, இந்த கிராமத்து சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.