/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கஉலக மகளிர் தினத்தில் 'மினி மாரத்தான்

ADDED : மார் 09, 2025 01:34 AM
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கஉலக மகளிர் தினத்தில் 'மினி மாரத்தான்'
ராசிபுரம்:உலக மகளிர் தினமான நேற்று, நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், 'மினி மாரத்தான்' போட்டி ராசிபுரத்தில் நடந்தது.
உலக மகளிர் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியில் மாவட்ட போலீசார் மற்றும் தனியார் கல்லுாரி சார்பில், 'மினி மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டது. நாமக்கல் டி.எஸ்.பி., சக்திவேல், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி உள்ளிட்டோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர்.
பெண்களுக்கான இலவச உதவி மைய எண், '181' மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, 'கால் மீ 181' என்ற எண்ணுடன், 'டி-சர்ட்' வழங்கப்பட்டது.
ஆண்டகலுார் அடுத்த கொழிஞ்சிப்பட்டி பைபாஸ் பகுதியில் தொடங்கிய, 'மினி மாரத்தான்' போட்டி, பாலப்பாளையம், 85. குமாரபாளையம் வழியாக, மூன்று கிலோ மீட்டர் துாரம் சென்று இறுதியாக குருசாமிபாளையம் பகுதியில் முடிவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.