/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்க்கரை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
/
சர்க்கரை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
சர்க்கரை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
சர்க்கரை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
ADDED : மார் 14, 2025 01:53 AM
சர்க்கரை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகா, கபிலக்குறிச்சி அடுத்த ரங்கபாளையத்தில் தேங்காய் நார்மில் செயல்பட்டு வந்தது. அவற்றை வாங்கிய நபர், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலையாக மாற்றினார். பழைய சர்க்கரையை எடுத்து வந்து, ஆகாத கழிவுகளை சேர்த்து அதிகளவில் ஆசிட் ஊற்றி, பில்டர் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் கலரில் உள்ள கருப்பு சர்க்கரையை, அதிகப்படியான ஆசிட் ஊற்றி கிளியர் செய்து, கோல்ட் கலரில் மாற்றி ஏற்றுமதியும் செய்து வந்தனர்.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்யாமல் விளை நிலத்தில் வெளியேற்றியதால் துர்நாற்றம் வீசியது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாயினர். மேலும் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய கிணறுகள் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆவேசமடைந்த கிராம மக்கள், ஆலையை மூடி சீல் வைக்க கோரி கடந்தாண்டு அக்., 25ம் தேதி ரங்கம்பாளையம், சுப்பையம் பாளையம், செஞ்சடையாம் பாளையம், சீத்தக்காடு, கபிலக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, வருவாய்த் துறையினர் ஆலையை மூடி சீல் வைத்து மின் இணைப்பை துண்டித்தனர்.
இந்நிலையில், மீண்டும்
ஆலையை திறக்க தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்ததையடுத்து, ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில் தனியார் ஆலை உரிமையாளர் மற்றும் கிராம மக்களை அழைத்து தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஆலை உரிமையாளர்கள், மீண்டும் ஆலையை திறந்து பராமரிப்பு பணி மட்டும் மேற்கொள்ள அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்தனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில்
கையெழுத்திட மறுத்தனர். தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட ஆலைக்குரிய சாவியை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலை உரிமையாளர் வசம் ஒப்படைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, ப.வேலூர் தாலுகா அலுவலகம் முன் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று மதியம் 12:00 மணிக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய் துறை அதிகாரிகள், மீண்டும் பேச்சு
வார்த்தை நடத்தப்படும். தற்போதைக்கு நாட்டு சர்க்கரை ஆலை செயல்பட அனுமதி இல்லை, பராமரிப்பு பணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.