/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பயிற்சி பெண் டாக்டர் கொலை மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 25, 2024 01:21 AM
பயிற்சி பெண் டாக்டர் கொலை
மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஆக. 25-
மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள, ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.
நாமக்கல் ஒன்றிய செயலாளர் தனுஷ் தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், தலைவர் லட்சுமணன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் தங்கராஜ் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.
பெண் மருத்துவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். முழுமையான விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். வழக்கை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.