/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈஷா ரத ஊர்வலம் பக்தர்கள் மலர் துாவி வரவேற்பு
/
ஈஷா ரத ஊர்வலம் பக்தர்கள் மலர் துாவி வரவேற்பு
ADDED : ஜன 10, 2025 01:09 AM
நாமகிரிப்பேட்டை, :நாமகிரிப்பேட்டையில், நேற்று ஈஷா ரத ஊர்வலம் வந்தது. பக்தர்கள் மலர் துாவி வரவேற்றனர்.
கோவை ஈஷா மையம் சார்பில் பிப்., 26ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்தியா முழுவதும் ஆதியோகி சிலை ரத ஊர்வலம், ஒவ்வொரு கிராமமாக சென்று வருகிறது. தமிழகத்தில் நான்கு ரதங்கள் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை வாழப்பாடியில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை மங்களபுரம் வந்தது. அங்குள்ள கோவில் மற்றும் பொது இடங்களில் ரதம் நின்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வழிபட்டு சென்றனர். மதியம் ஆயில்பட்டி, மெட்டாலாவில் ரதம் நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தது.
தொடர்ந்து மதியம் நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட், சீராப்பள்ளி பஸ் ஸ்டாண்ட், சிங்களாந்த புரம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ரத ஊர்வலம் சென்றது. ஏராளமானோர் மலர் துாவி ரதத்தை வரவேற்று, ஆதியோகியை வழிபட்டனர். ஏற்பாடுகளை ராசிபுரம் ஈஷா மைய பொறுப்பாளர் ராஜா செய்திருந்தார்.