/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரங்கநாதர் கோவில் படிவாசலில் இரும்பு கைப்பிடி கம்பி அமைப்பு
/
அரங்கநாதர் கோவில் படிவாசலில் இரும்பு கைப்பிடி கம்பி அமைப்பு
அரங்கநாதர் கோவில் படிவாசலில் இரும்பு கைப்பிடி கம்பி அமைப்பு
அரங்கநாதர் கோவில் படிவாசலில் இரும்பு கைப்பிடி கம்பி அமைப்பு
ADDED : பிப் 18, 2025 12:51 AM
நாமக்கல்:நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. அதன் கிழக்கு பகுதியில் குடைவரை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு இணையாக இக்கோவிலில் பள்ளி கொண்ட பரந்தாமன், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலுக்கு செல்ல, 100 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். இதனால் முதியோர், உடல்நலம் குன்றியோர் அங்கு செல்வது சிரமமாக இருந்தது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் படிக்கட்டுகளில் பக்தர்கள் வசதிக்காக இரும்பு கைப்பிடி கம்பிகள் அமைக்க வேண்டும் என, ஆன்மிக ஹிந்து சமய பேரவையினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, 100 அடி உயரத்திற்கு படிக்கட்டுகளின் இருபுறமும், இரும்பு கைப்பிடி கம்பிகள் பொருத்தப்பட்டன. இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.