/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
/
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 20, 2025 01:34 AM
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 27; இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு, 8, 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அருண்குமார், ஒட்டன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த அக்., 21 மாலை, 3:30 மணிக்கு விசைத்தறி கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, அருண்குமார் குடும்பத்தினருக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இதில் சங்கத்தினருக்கும், பட்டறை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. உடன்பாடு எட்டப்படாததால், பாதிக்கப்பட்ட அருண்குமார் குடும்பத்தினருக்கு, 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி கல்லங்காட்டுவலசு பஸ் ஸ்டாப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் கோவிந்தராஜ், மாவட்ட செயலர் புகழேந்தி, துணை செயலர்கள் சீனிவாசன், அந்தோணி உள்பட பலர் பங்கேற்றனர்.