/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளி செயல்படஅனுமதி: மாணவர் சேர்க்கைக்கும் உறுதி
/
மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளி செயல்படஅனுமதி: மாணவர் சேர்க்கைக்கும் உறுதி
மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளி செயல்படஅனுமதி: மாணவர் சேர்க்கைக்கும் உறுதி
மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளி செயல்படஅனுமதி: மாணவர் சேர்க்கைக்கும் உறுதி
ADDED : மார் 03, 2025 01:34 AM
மோகனுார் சர்க்கரை ஆலை பள்ளி செயல்படஅனுமதி: மாணவர் சேர்க்கைக்கும் உறுதி
மோகனுார்:பெற்றோர் நடத்திய போராட்டம் காரணமாக, மூடுவிழா காண இருந்த மோகனுார் சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி, தொடர்ந்து செயல்படவும், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், 1978ல் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆலைக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளின் குழந்தைகள், குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில், இந்த மெட்ரிக் பள்ளி தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் மெட்ரிக் பள்ளியான இங்கு, குறைந்த கட்டணத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1992ல், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சர்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதையடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 சேர்க்கை நிறுத்தப்பட்டு, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தற்போது, எல்.கே.ஜி., முதல், பத்தாம் வகுப்பு வரை, 140 மாணவ, மாணவியர் மட்டுமே படிக்கின்றனர். வரும், 28ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை, இப்பள்ளியை சேர்ந்த, 13 பேர் மட்டுமே எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளை மூட சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மோகனுார் சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியும் மூடுவிழா காணும் நிலை உருவானது. அவற்றை அறிந்த பெற்றோர், கரும்பு விவசாயிகள், விவசாய முன்னேற்ற கழகத்தினர், பள்ளியை தொடர்ந்து நடத்த வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பள்ளியை தொடர்ந்து நடத்தவும், அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை துவங்க அனுமதி அளித்தும், சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.