/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் பணியாளரிடம் தகராறு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
/
கோவில் பணியாளரிடம் தகராறு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
கோவில் பணியாளரிடம் தகராறு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
கோவில் பணியாளரிடம் தகராறு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
ADDED : மார் 03, 2025 01:37 AM
கோவில் பணியாளரிடம் தகராறு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. கோவில் கடந்த, 14 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது.
நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல போராட்டங்களுக்கு பின், சில மாதங்களுக்கு முன் கோவில் திறக்கப்பட்டது. கோவில் அறக்கட்டளை சார்பில், பராமரிப்பு செய்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சிலர், கோவில் நிர்வாகத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று காலை கோவிலில் துப்புரவு பணியாளர் பெருமாயி, 65, கோவில் வாசலில் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தண்ணீர் குடத்தை எட்டி உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த, 'சிசிடிவி' வீடியோவும் உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் புதுச்சத்திரம் போலீசில் புகாரளித்துள்ளனர்.