/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரைபுரண்ட காவிரி தண்ணீரின்றி வறட்சிமேட்டூர் அணையில் நீர் திறக்க கோரிக்கை
/
கரைபுரண்ட காவிரி தண்ணீரின்றி வறட்சிமேட்டூர் அணையில் நீர் திறக்க கோரிக்கை
கரைபுரண்ட காவிரி தண்ணீரின்றி வறட்சிமேட்டூர் அணையில் நீர் திறக்க கோரிக்கை
கரைபுரண்ட காவிரி தண்ணீரின்றி வறட்சிமேட்டூர் அணையில் நீர் திறக்க கோரிக்கை
ADDED : மார் 13, 2025 01:46 AM
கரைபுரண்ட காவிரி தண்ணீரின்றி வறட்சிமேட்டூர் அணையில் நீர் திறக்க கோரிக்கை
நாமக்கல்:'கரைபுரண்ட காவிரி ஆறு, தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. அதனால், குடிநீர், பாசனம், தொழிற்சாலை தேவைக்கு, மேட்டூர் அணையில் இருந்து, 2,000 கன அடி நீர் திறக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து, நாமக்கல் மாநகராட்சிக்கு, மூன்றுக்கும் மேற்பட்ட குடிநீர் திட்டம் மூலம், தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், மோகனுார் டவுன் பஞ்சாயத்து மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கும், காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியபோது, 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. அவ்வாறு வெளியேறிய தண்ணீரை, தேக்கி வைக்க தமிழகத்தில் வழி இல்லாததால், நேராக கடலில் கலந்து வீணானது. அதன் விளைவாக, தற்போது காவிரி ஆறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் (சிபா), தொழில் நுட்ப செயலாளர் அஜிதன் கூறியதாவது:
தற்போது, கோடை மழை எப்படி பொழிய போகிறது என்பது தெரிய வேண்டும். அப்படி இல்லையென்றால், கோடையில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால், கழிவுநீரை குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொற்ப நீரிலும், கழிவுநீரை வெளியேற்றி வருவதால், நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான ஊற்றுக்கிணறுகள் வற்றிப்போனதால், வரக்கூடிய கழிவுநீரை அப்படியே பம்ப் செய்து வினியோகம் செய்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம் என்றால், மாசுபட்ட குடிநீர் மறுபுறம் என, இருதலை கொல்லி எறும்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடிநீர், பாசனம், தொழிற்சாலைகளின் தேவைக்கு, மேட்டூர் அணையில், 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். அப்போது தான், கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து, தேவையை பூர்த்தி செய்யமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.