/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' இன்று தொடக்கம்சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ADDED : மார் 27, 2025 01:35 AM
டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' இன்று தொடக்கம்சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாமக்கல்:''டெண்டர் விதிகளை தளர்த்த வலியுறுத்தி, தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன,'' என்று, சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறினார்.
இதுகுறித்து நாமக்கல்லில் அவர் கூறியதாவது:தென் மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை ஆயில் நிறுவனங்களுக்கு டெண்டர் முறையில், எல்.பி.ஜி., லாரிகளை இயக்கி வரும் லாரி உரிமையாளர்களுக்கு, புதிய ஒப்பந்தத்தை அந்த ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில், 21 டன் கொண்ட, மூன்று அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை, கிளீனர் இல்லையென்றால் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகளை தளர்த்த ஆயில் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் வேறுவழியின்றி நாளை (இன்று) காலை, 6:00 மணி முதல், தென்னிந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, காஸ் லோடு ஏற்ற, இறக்கமாட்டோம். இதில், 5,000க்கும் மேற்பட்ட காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபட உள்ளன. போராட்டத்தால் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.