தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு கல்லுாரி விடுதி மாணவர்கள் கோரிக்கை: நிறைவேற்றிய கலெக்டர்

அரசு கல்லுாரி விடுதி மாணவர்கள் கோரிக்கை: நிறைவேற்றிய கலெக்டர்

அரசு கல்லுாரி விடுதி மாணவர்கள் கோரிக்கை: நிறைவேற்றிய கலெக்டர்


ADDED : டிச 25, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு கல்லுாரி விடுதி மாணவர்கள்

கோரிக்கை: நிறைவேற்றிய கலெக்டர்

ராசிபுரம், டிச. 25-

ராசிபுரம் தாலுகாவில், கடந்த, 18ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கலெக்டர் உமா, ராசிபுரம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவர் விடுதியை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது விடுதி மாணவர்கள், 'விளையாட்டு உபகரணங்கள் வேண்டும்' என, கோரிக்கைவிடுத்தனர். அதை தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று, சதுரங்கம், கைப்பந்து, கிரிக்கெட், இறகுபந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை, கலெக்டர் உமா மாணவர்களிடம் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ''மாணவர்கள் எவ்வித கவன சிதறலுக்கும் ஆளாகாமல் விளையாட்டிலும், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், கல்வியோடு விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டிலும் நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும். நாம் அனைவரும் விளையாட்டு துறையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கல்வியோடு தங்களது தனித்திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us