/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 12, 2025 01:16 AM
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்
திருச்செங்கோடு,:திருச்செங்கோடு நகராட்சி, கூட்டப்பள்ளி ஏரி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், நகராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேர்மன் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். திருச்செங்கோடு நகரில் மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கம் காரணமாக, கழிவுநீர் செல்லும் பாதையில் கழிவுநீர் சாக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், திருச்செங்கோடு பகுதிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசியம் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளான நாமும் பொதுமக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டால் அந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் துர்நாற்றமோ, சுகாதார சீர்கேடோ ஏற்படாது. நல்ல திட்டங்களை வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.