/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி
/
எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி
எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி
எருமப்பட்டியில் சாலை பாதுகாப்பு பள்ளி மாணவ, மாணவியர் பேரணி
ADDED : ஜன 24, 2025 01:12 AM
எருமப்பட்டி, :எருமப்பட்டியில், வட்டார போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், இந்தாண்டு கிராம பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், எருமப்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் தலைமை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி, நித்யா,
சரவணன் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் ராஜீ, பேரணியை கொடியசைத்து துவக்கி வகித்தார். இதில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு கடை வீதி, பழனி நகர் வழியாக யூனியன் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது, சாலையில் பாதுகாப்புடன் செல்வது குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு
பிரசுரங்கள் வழங்கினர்.

